Friday, 20 December 2013

நட்பு



நீயும் நானும் ஒன்று
உன் காதலால் இரண்டானோம் இன்று
தாயைவிட மேலாய் இருந்தாய் அன்று
பேயைவிட கீழாய் போனாய் இன்று
நட்பு மேலாய் இருந்தது அன்று
காமம் உன் கண்ணை மறைத்தது இன்று
நான் உனக்கு சொன்னது நன்று
அதை நீ புரியும் வேளை என்று?
ஒரு நாள் புரியும் உனக்கு நின்று
நான் உன்னுடன் இருக்கமாட்டேன் அன்று!







உங்கள் மாயாசங்கர்