Monday, 22 December 2014

உண்மையாய் வாழ்ந்து பார்

வலிமை வேண்டுமா மலை ஏறிப்பார் 
நட்பு வேண்டுமா உதவிப்பார்
பொய் வேண்டுமா ஏமாற்றிபார்
அன்பு வேண்டுமா அம்மாவை பார்
ஒழுக்கம் வேண்டுமா உத்தமனாய் இருந்து பார்
வெற்றி வேண்டுமா தோல்விகளை சந்தித்துபார்
அனுபவம் வேண்டுமா உலகம் சுற்றி பார்
துரோகம் வேண்டுமா தீயவர்களுடன் பழகி பார்.
அமைதி வேண்டுமா தவம் பண்ணி பார்
எதுஎப்படியோ உண்மையாய் வாழ்ந்து பார் உலகம் உன்னை வாழ்த்தும்

Saturday, 26 April 2014

வெற்றி



எங்கும் வெற்றி எதிலும் வெற்றி,
தொட்ட காரியத்தில் வெற்றி,
அன்னை எனக்கு அளித்தாள் வெற்றி,
வேலன் எனக்கு தந்த வெற்றி,
வெற்றி வெற்றி வெற்றி,
நான் அடைவேன் வெற்றி,
உலக அனைத்தும் வெற்றி,
நான் பெறுவேன் வெற்றி,
எனக்கு உறுதி வெற்றி,
படைத்தவன் அளித்தான் வெற்றி,
தோல்விக்கு தோல்வி
வெற்றிக்கு வெற்றி எனக்கு வெற்றி.

mayasankar

Tuesday, 25 March 2014

காதல்





ஐhதி என்னும் தடையை மீறி காதலித்த என் தேவதையே,
உன்னை நெஞ்சில் வைத்தால் தெரியாது என்று,
என் கண்ணில் உன்னை வைத்தேன்,
என்னை அழவிடாதே'


- mayasankar

Friday, 20 December 2013

நட்பு



நீயும் நானும் ஒன்று
உன் காதலால் இரண்டானோம் இன்று
தாயைவிட மேலாய் இருந்தாய் அன்று
பேயைவிட கீழாய் போனாய் இன்று
நட்பு மேலாய் இருந்தது அன்று
காமம் உன் கண்ணை மறைத்தது இன்று
நான் உனக்கு சொன்னது நன்று
அதை நீ புரியும் வேளை என்று?
ஒரு நாள் புரியும் உனக்கு நின்று
நான் உன்னுடன் இருக்கமாட்டேன் அன்று!







உங்கள் மாயாசங்கர்

Thursday, 14 November 2013

முதியோர் இல்லம்




அன்னை நீ
ஆக்கம் நீ
இன்பம் நீ
ஈதல் நீ
உறவு நீ
ஊக்கம் நீ
என்னில் நீ
ஏக்கம் நீ (இல்லாதாருக்கு)
ஐந்தும் நீ (பஞ்சபூதம்)
ஒன்றாய் நீ

இன்றோ ஒளவையார் முதியோர் இல்லத்தில் நீ



உங்கள் மாயாசங்கர்

Tuesday, 17 September 2013

மழை

http://www.hindustantimes.com/Images/2010/4/64d2b36f-e6a8-4fa1-a286-c6d4c326c332HiRes.JPG



எங்கள் தலைவர்கள் போல்
நீயும் வாக்கு தவறிவிட்டாய்,
அவர்கள் தான் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு
அதை நிறைவேற்ற மறந்துவிடுவார்கள்.
அந்த தலைவர்கள் மிஞ்சி நீ
முதலிடம் பெற்றுவிட்டாய்.